- Duraimurugan
- எடப்பாடி
- திமுக
- பொதுச்செயலர்
- அமைச்சர்
- காட்பாடி
- வேலூர் மாவட்டம்
- கதிர் ஆனந்த்
- சங்கீதா
- துரை முருகன்...
ேவலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 13வது முறை திமுக வேட்பாளராக கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். துரைமுருகனுக்கு மாற்று வேட்பாளராக எம்பி கதிர்ஆனந்த் மனைவி சங்கீதா வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பின்னர் வெளியே வந்த அமைச்சர் துரைமுருகனிடம், ஆரணியில் ‘‘நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது.
அவரால் நடக்க முடியவில்லை. பெருமைக்காக போட்டியிடுகிறார் என பேசியிருந்தாரே? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘எடப்பாடி பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டும் என்றால் என்னுடன் நடைபோட்டி பந்தயத்திற்கு எடப்பாடியை வரச்சொல்லுங்கள் பார்ப்போம்’ என்றார்.
