×

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு, இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா, தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி அன்று முதல் அம்மன் தினமும் வெள்ளி ரிஷபம், தங்கக்குதிரை, ஊஞ்சல் சேவை, பூப்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. முக்கிய திருவிழாவான அக்னிச்சட்டி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 21, 51 அக்னிச்சட்டிகளை எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

Tags : Virudhunagar Parasakthi Mariamman Temple ,Virudhunagar ,Panguni Pongal ,Virudhunagar Sri Parasakthi Mariamman Temple ,Panguni Pongal festival ,Sri Parasakthi Mariamman Temple ,
× RELATED சாத்தான்குளம் தந்தை – மகன் காவல் நிலைய...