வேதாரண்யம், ஏப்.6: நாகப்ப ட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்ப ட்டுள்ளவாக்கு இயந்திரங்க ளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேதாரண்யம் சட்டசபை தொகுதியிலுள்ள ஓட்டுப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் பயன்படு த்த உள்ள மூன்று வகையான ஓட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு கோட்டாட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 115 பள்ளிகள், அங்கன்வாடி உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் 240 ஓட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு செய்ய தேவையான விவிபேட் ஓட்டுப் பதிவு என மூன்று வகைகளில் 878 ஓட்டு இயந்திரங்கள் நாகையிலிருந்து வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு இரவு பகலாக போலீசார் பாதுகாத்து வருகின்றனர் என தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் கண்ணன் தெரிவித்தார். அப்போது தாசி ல்தார் ஜெயசீலன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
