×

ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

கரூர் ஏப்ரல் 6: ஈஸ்டர் பண்டிகை என்பது ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் மிக முக்கியமான கிறிஸ்தவ பண்டிகையாகும். இது உயிர்ப்பு ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது, இது நம்பிக்கையையும், மரணத்தின் மீது வாழ்வின் வெற்றியையும் குறிக்கிறது. ஈஸ்டர் என்பது இயேசுவின் உயிர்த்தெழுதலைக்கொண்டாடும் மகிழ்ச்சியான திருவிழா. இது பாஸ்கா என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது கடந்து போதல் என்று பொருள் புனித வெள்ளியன்று இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு,

ஞாயிற்றுக்கிழமை அவர் உயிர்த்தெழுந்ததை குறிக்கிறது. ஈஸ்டருக்கு முன்னதாக 40 நாட்கள் தவக்காலம் நோன்பு மற்றும் பிரார்த்தனையுடன் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் சிறப்பு தேவாலய ஆராதனைகளில் கலந்து கொண்டனர். இதன் அடிப்படையில் கரூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களான தெரசா சர்ச், சிஎஸ்ஐ சர்ச், பசுபதிபாளையம் சர்ச் ஆகியவற்றில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பகுதிகள் முட்டைகள் (புது வாழ்வின் சின்னம்) முயல்கள் புறா வழங்கப்பட்டன.

 

Tags : Easter ,Karur ,Christian ,Jesus Christ ,Resurrection Sunday ,
× RELATED மதுபானம் விற்ற 2 வாலிபர்கள் கைது