×

கரூர் மாவட்டத்தில் இதுவரை 84 வேட்பாளர்கள் மனு தாக்கல்

கரூர், ஏப். 6: தமிழக சட்டமன்ற தேர்தலில் மற்ற தொகுதிகளை காட்டிலும் கரூர் சட்டமன்ற தொகுதி பிரபலமான தொகுதியாக உள்ளது. தமிழகத்தில் கரூர் தொகுதியின் வெற்றியை அனைவரும் எதிர்பார்க்கும் தொகுதியாக உள்ளது. அதற்கேற்பத்தான் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செயல்படுகளும் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தற்போது, இந்த தேர்தலில் அதையும் தாண்டி அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

அதன்படி, கடந்த மார்ச் 30ம்தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி, ஏப்ரல் 2 மற்றும் 4ம்தேதி என மூன்று நாட்கள் வேட்புனு தாக்கல் நடைபெற்றது. இதில், கரூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் இதுநாள் வரை 84 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், ஏப்ரல் 6ம்தேதியும் வேட்பு மனு தாக்கல் நடைபெறவுள்ளது. எனவே, இந்த முறையும் தமிழகத்தில் அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக கரூர் வரக்கூடும் என அனைவரும் பேசிக் கொள்கின்றனர்.

 

Tags : Karur ,Assembly Constituency ,Tamil Nadu ,Assembly ,
× RELATED மதுபானம் விற்ற 2 வாலிபர்கள் கைது