×

பைக் சீசிங்: வாழை இலை வியாபாரி தற்கொலை

 

ஈரோடு, ஏப்.6: கவுந்தப்பாடி அடுத்த வேலாம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (27). இவரது மனைவி நந்தினி (21), மகள் ஹன்சிகா(4). வாழை இலை வியாபாரியான இளங்கோவன், கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக பெருந்துறையில் உள்ள பைனான்ஸ் மூலம் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். இதற்கு மாதம் ரூ.3,500 செலுத்தி வந்துள்ளார். ஆனால், இளங்கோவன் கடந்த இரு மாத தவணைத்தொகையை கட்டவில்லை என்பதால், கடந்த 3ம் தேதி, வீட்டிற்கு வந்த பைனான்ஸ்காரர்கள், இருசக்கர வாகனத்தை சீசிங் செய்து எடுத்துச்சென்று விட்டனர். இதனால், வேதனையடைந்த இளங்கோவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி நந்தினி அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் விசாரித்தனர்.

Tags : Erode ,Elangovan ,Velampalayam ,Kaundhapadi ,Nandini ,Hansika ,Perundurai ,
× RELATED அந்தியூர்- பர்கூர் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் கர்நாடகா செல்ல தடை