×

பவானியில் லாட்டரி விற்ற இருவர் கைது

 

பவானி, ஏப். 6: பவானி பழனிபுரம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் நடத்திய திடீர் சோதனையில் பழனிபுரம் முதல் வீதியில் வசிக்கும் பாலச்சந்தர் (59), தனது வீட்டில் லாட்டரி சீட்டுகள் எழுதி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, பாலச்சந்தரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பணம் ரூ.17,500, ஒரு செல்போன் மற்றும் கையால் எழுதப்பட்ட 3 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இவருடன் தொடர்பில் இருந்த பவானியை அடுத்த சின்னமோளபாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த முருகன் (54) என்பவரும் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து, முருகனைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags : Bhavani ,Palanipuram ,Balachander ,Palanipuram First Street ,
× RELATED அந்தியூர்- பர்கூர் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் கர்நாடகா செல்ல தடை