×

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

ஈரோடு, ஏப். 3: ஈரோடு அருகே கோயில் உண்டியலை உடைத்து ரொக்கத்தை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணமார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு மண்டல பூஜை முடித்து, கோயில் பூசாரி கோயிலை பூட்டி சென்றார். நேற்று காலை கோயிலுக்கு வந்தபோது வெண்கலத்தால் ஆன வேல் உடைந்து கீழே கிடந்தது. மேலும், கோயிலின் பிரகாரத்தில் உள்ள உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கங்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் அடையாளம் தெரியாத ஒரு நபர் இரு சக்கர வாகனத்தில் வந்து, கோயிலில் இருந்த வேலை பிடுங்கி, உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தாலுகா போலீசில் கோயில் செயல் அலுவலர் கயல்விழி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.

 

Tags : Erode ,Annamar ,Hindu Religious and Endowments Department ,Kasbapet ,
× RELATED வாலிபர் சடலமாக மீட்பு