- அண்ணாமலை
- அமிஷா கம்பல்
- டிடீவி
- அமுகா
- பொதுச்செயலர்
- மதுரை கோச்சடா
- தின மலர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- என்டிஏ
மதுரை கோச்சடையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை என்னிடம் பேசிய போது நான் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறினார். என்டிஏ வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் எல்லா தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வேன் என்றார். நான் போட்டியிடாதது குறித்தும் பலரும் கருத்துகளை கூறினர். அழுத்தம் உள்ளதா, கண்டிஷன் உள்ளதா என்றெல்லாம் கேட்டார்கள்.
இன்னும் சொல்லப்போனால் ஒன்றிய உள்துறை அமைச்சரே என்னை தேர்தலில் போட்டியிடும்படிதான் கூறினார். நானாகத்தான் முடிவெடுத்தேன். இவ்வகையில் அரசியலில் ஒருவர் போட்டியிடாமல் போகும்போது, பல்வேறு யூகங்களை கற்பனைகள் எழும். பலரும் சொன்னாலும் கூட, தேர்தலில் போட்டியிடாதது அண்ணாமலையின் தனிப்பட்ட முடிவு. இதில் அழுத்தம் ஏதும் இருக்கும் என நினைக்கவில்லை. அண்ணாமலை குறித்து யூகங்கள், வதந்திகள் பெரிதாக்கப்படுகிறது. தவறான தகவல்கள் எல்லாம் செய்திகளாக வெளியிடப்படுகிறது.
இன்றைக்கு அண்ணாமலை தான் சப்ஜெக்ட்டா? நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. நான் தேர்தலில் நிற்கவில்லை என்பதால் எங்கள் கட்சியினர் வருத்தப்பட்டார்கள். இருந்தாலும் என் முடிவு. தொண்டர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ராமதாஸ் கூட்டணி எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பது போல தோன்றும், கடைசி நேரத்தில் அதெல்லாம் இருக்காது. அத்தி பூத்தது போல் அவர்களால் ஏதாவது ஒரு தொகுதியில் பாதிப்பு வரலாம். இவ்வாறு கூறினார்.
* ரம்ஜானை நிம்மதியாக கொண்டாட மோடிதான் காரணமாம்
மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் நேற்று டிடிவி.தினகரன், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஈரான் போன்ற நாடுகளில் போர் நடைபெறுவதால் அங்குள்ள இஸ்லாமிய சொந்தங்களும், அங்கு வாழ்கின்ற அனைத்து பொதுமக்களும் ரம்ஜானை சரியாக கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்தியாவில் பிரதமர் மோடி இருப்பதால்தான் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இங்குள்ள இஸ்லாமிய சொந்தங்கள் நிம்மதியாக ரம்ஜானை கொண்டாட முடிந்தது’’ என்றார்.
