×

3.55 கிலோ தங்கம், 24.36 கிலோ வெள்ளி சுந்தர்.சி, குஷ்புவுக்கு ரூ.37.61 கோடி சொத்து

அதிமுக கூட்டணியில் புதிய நீதிகட்சி வேட்பாளராக இயக்குரும், நடிகருமான சுந்தர்.சி மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், நேற்று தனது மனைவி குஷ்பு மற்றும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலரான செல்வத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  பின்னர் சுந்தர்.சி கூறுகையில், ‘‘எனது தந்தை அரசு ஊழியராக இருந்தார். ஈரோட்டில் பிறந்து, கோவையில் வளர்ந்து சென்னையில் பணியாற்றினார். தாயின் பூர்வீகம் திருச்சி. தந்தையின் பூர்வீகம் பழநி.

இதுவும் தமிழ்நாடு தான். எனது வீடும், ஊரும் இனி மதுரை தான். இதற்காக மதுரையிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளேன். மாதத்தில் 15 நாட்கள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பேன். தமிழர்களின் தலைநகர் சென்னை என்றால், தமிழின் தலைநகர் மதுரை. இழந்த பெருமையை மதுரைக்கு மீண்டும் பெற்றுத் தருவதே எங்களது நோக்கம். தொகுதி முழுவதும் முழு வீச்சில் பிரசாரம் தொடங்க உள்ளேன்’’ என்றார்.

சுந்தர்.சி தாக்கல் பிரமாண பத்திரத்தில், தனக்கு 3 சொகுசு கார்களின் இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.1.21 கோடி. கையிருப்பு ரூ.50,600 இருக்கிறது. வங்கி கணக்குகளில் ரூ.1.45 கோடி டெபாசிட். தங்க நகைகள் மதிப்பு ரூ.29 லட்சத்து 25 ஆயிரம், பிளாட்கள், நிலங்கள், வீடுகளின் மதிப்பு ரூ.20.82 கோடி. வங்கிக் கடன் ரூ.4.12 கோடி. மேடவாக்கம், ஆர்ஏ.புரம், ஆழ்வார்பேட்டை, கோவை குனியமுத்தூர், தெலங்கானா ராஜேந்திரா நகர், உள்பட அசையும் சொத்து ரூ.2.97 கோடி, அசையா சொத்தாக ரூ.17.73 கோடி என மொத்தமாக ரூ.20.82 கோடி சொத்துகள் உள்ளன.

மனைவி குஷ்புவின் கையிருப்பு ரூ.30 ஆயிரம். வங்கி கணக்குகளில் ரூ.4.80 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. ரூ.33.12 லட்சம் மதிப்பிலான சொகுசு கார், ரூ.4.80 கோடி மதிப்பிலான 3.55 கிலோ தங்க நகைகள், ரூ.60.90 லட்சம் மதிப்பிலான 24.36 கிலோ வெள்ளி நகைகள், திண்டிவனம், மயிலம் உட்பட பகுதிகளில் வீடுகள் மற்றும் பிளாட்களின் மதிப்பு உட்பட மொத்த சொத்து மதிப்பு ரூ.16.79 கோடி. மேலும், இவருக்கு ரூ.2.74 கோடி கடன் உள்ளது என வேட்புமனுவில் கூறியுள்ளார்.

Tags : Sundar.C ,Khushbu ,Madurai Central ,Justice Party ,AIADMK ,Election Commission ,New Justice Party ,A.C. Shanmugam ,
× RELATED சொல்லிட்டாங்க…