×

எங்க கட்சி ஆபீசை தேடி கூட்டணிக்காக பாஜவும், பாமகவும் ஓடோடி வந்தார்கள்: 2 மணி நேரத்தில் டீலிங்கை முடித்தோம்; பலமுறை டெல்லிக்கு ஓடிய இபிஎஸ் வீராப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. உதாரணம் எங்க கட்சி அலுவலகத்திற்கு பாஜ, பாமக கூட்டணி கட்சித் தலைவர்கள் வந்தார்கள். 2 மணி நேரத்தில் பேசி கூட்டணியை முடித்துவிட்டோம். தேடி வந்த 2 மணி நேரத்தில் கூட்டணி முடிவை அறிவித்தோம். எங்கள் கட்சி கூட்டணி முதல் நாள் பேச்சுவார்த்தை, மறுநாள் தொகுதி பங்கீடு, மூன்றாவது நாளில் பட்டியலை அறிவித்துவிட்டோம். வலிமையான கூட்டணியாக நாங்கள் செயல்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே அதிமுக-பாஜ கூட்டணி அமைக்கப்பட்டாலும். தொகுதி பங்கீட்டுக்கும், கூட்டணி உடன்படிக்கைக்கும் டெல்லிக்கு பலமுறை இபிஎஸ் ஓடோடி சென்றார். தொகுதி பங்கீடு, எந்தெந்த என எல்லாத்தையும் பாஜ முடிவெடுத்ததால் எடப்பாடி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். இதனால், தொகுதி பங்கீடு அறிவிப்பை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்தினார். ஆனால் தற்போது பிரசாரத்தில் எங்கள் கட்சி அலுவலகத்திற்கு கூட்டணி கட்சிகள் ஓடி வந்தார்கள். 2 மணி நேரத்தில் டீலிங்கை முடித்து விட்டோம் என்று பேசி இபிஎஸ் வீராப்பு பேசுவதாக அதிமுகவினரே கலாய்க்கின்றனர்.

Tags : BJP ,PMK ,EPS ,Veerappu ,Delhi ,Villupuram ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,
× RELATED காட்டுமன்னார்கோவிலில் நான்...