×

2025-26ம் நிதியாண்டில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி ரூ.2.66 லட்சம் கோடி

புதுடெல்லி: இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் கே.ராஜா பானு கூறுகையில், “சந்தைகள் மந்த நிலை, விலை அழுத்தங்கள் போன்ற உலகளாவிய சவால்கள் பல இருந்தாலும், வளர்ச்சி வேகத்தை தக்க வைத்து கொள்ளும் சில துறைகளில் மருந்து ஏற்றுமதியும் உள்ளது. 2025 ஏப்ரல் 2026 பிப்ரவரி வரையிலான நிதியாண்டில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 28.29 பில்லியன் அமெரிக்க டாலரை(ரூ.2.66 லட்சம் கோடி) தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.மருந்து ஏற்றுமதி 2030ம் ஆண்டுக்குள் 130 அமெரிக்க டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Tags : India ,New Delhi ,K. Raja Bhanu ,Director General ,Pharmaceutical Export Promotion Council of India ,
× RELATED மும்மொழிக் கொள்கை பற்றி ஒன்றிய...