×

ஈரானில் சிக்கி உள்ள இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாக தாயகம் வருகை

புதுடெல்லி: ஈரானில் சிக்கி உள்ள இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அஜர்பைஜான், ஆர்மீனியா நாடுகள் வழியாகவும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் ஜோர்டான், எகிப்து நாடுகள் வழியாகவும் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் மேற்காசிய மோதல்கள் தொடங்கியது முதல் இதுவரை 996 பேர் ஆர்மீனியா வழியாகவும், 204 பேர் அஜர்பைஜான் வழியாகவும்(மொத்தம் 1,200 பேர்) இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரானில் சிக்கியிருந்த இந்திய மீனவர்கள் நேற்று ஆர்மீனியா வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டதாக ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களை இந்தியா அழைத்து வர உதவிய ஆர்மீனிய அரசாங்கத்துக்கு ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Iran ,Armenia ,New Delhi ,Union government ,India ,Indians ,Azerbaijan ,Israel ,Jordan ,Egypt ,
× RELATED மும்மொழிக் கொள்கை பற்றி ஒன்றிய...