- ஹரியானா ராஜ்ய சபா
- காங்கிரஸ் ஒழுக்கம் செயல் குழு
- சண்டிகர்
- ராஜ்ய சபா
- ஹரியானா
- 5
- காங்கிரஸ்
- பாஜக
- ஷாலி சௌத்ரி
- ரேணு…
சண்டிகர்: அரியானாவில் இருந்து மாநிலங்களவைக்கு 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜ ஆதரவு சுயேச்சைக்கு வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் தொடர்பாக எம்எல்ஏக்களான ஷல்லி சவுத்ரி, ரேணு பாலா, ஜர்னைல்சிங், முகமது இஸ்ரேயில், முகமது இல்லியாஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து விசாரிக்க தரம்பால் மாலிக் தலைமையில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு தரம்பால் மாலிக் கூறுகையில்,5 எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ஷல்லி சவுத்ரி,ரேணு பாலா, ஜர்னைல் சிங் ஆகியோர் மட்டுமே நோட்டீசுக்கு விளக்கம் அளித்தனர். 2 எம்எல்ஏக்கள் நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை என்றார்.
