சிவகங்கை, பிப்.19: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசின், தொழில் வர்த்தக அமைச்சகம் இணையதளம் உருவாக்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளின் கொள்முதலில் பங்கேற்று தங்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை அளிக்க விரும்பும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசு உருவாக்கியுள்ள www.india.gov.in/spot என்ற இணையதளத்தில் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்து, அரசு துறைகள் வெளியிடும் டெண்டரில் பங்கேற்று பயனடையலாம். இணையதளத்தில் பதிவு செய்வதால் அரசு துறைகள் தங்களுக்கு தேவையான பொருட்களை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய இயலும்.