×

ஐபிஎல் போட்டிகளை பார்க்கச் செல்வோர் மாநகரப் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை ஐபிஎல் போட்டிகளை பார்க்கச் செல்வோர் மாநகரப் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரம் முன்பு, முடிந்த பின் 3 மணி நேரத்திற்குள் பயணிப்போருக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பின் அண்ணா சதுக்கம், தீவுத் திடல், சென்னை பல்கலை. பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சி.எஸ்.கே. அணியிடம் மாநகர போக்குவரத்துக் கழகம் கட்டணம் பெற்றுக்கொண்டதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச பயணம் செய்யலாம்.

Tags : IPL ,Chennai Corporation ,Chennai ,Chennai Municipal Transport Corporation ,
× RELATED சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி...