×

பிரசாரத்தின்போது விஜய்க்கு உரிய பாதுகாப்பு வேண்டும் ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநருக்கு தவெகவினர் கடிதம்: சமூக வலைத்தளங்களில் கிண்டல்

சென்னை: தவெக சார்பில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேற்று ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், “தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடுமையான குறைபாடுகள் உள்ளது. பெரம்பூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கொளத்தூருக்கு புறப்பட்டார். ஆனால் விஜய்க்கு போதுமான வகையில் காவல்துறை பாதுகாப்பு இல்லை. இத்தகைய குறைபாடுகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படுபவர் ஆகிய இரு தரப்பினரின் பாதுகாப்பையும் வெகுவாக பாதிக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா ஆகியோருக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் அனுப்பியதாக இணையத்தில் வெளியாகியிருக்கும் கடிதத்தில், மத்திய உள்துறை செயலாளர் என அஜய்குமார் பல்லாவின் பெயர் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர், கடந்த 2025 ஜனவரி மாதமே மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டு விட்டார். தற்போது உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாற்றப்பட்டது கூட தெரியாமல் தவெக நிர்வாகி நிர்மல்குமார் கடிதம் எழுதியுள்ளார். தவெகவினரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யும் காட்சி வைரலாகியுள்ளது. இந்த கடிதம் தொடர்பாக தவெக உரிய விளக்கம் அளிக்கவில்லை. மேலும், உள்துறை செயலாளர் பெயரை அஜய் பல்லா என குறிப்பிட்டு எழுதியதால் தவெக கடிதம் பனையூருக்கு திரும்பி வர வாய்ப்புள்ளது. தவறான பெயரை குறிப்பிட்டதால் உள்துறை செயலாளருக்கு கடிதம் சென்று சேராது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதுவதற்கு பதிலாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது தவெக.

Tags : Vijay ,Davekavinar ,Manipur ,governor ,EU ,Chennai ,EU Interior Minister ,Amitsha ,Daveka ,Dweka ,Perampur ,Kolathur ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...