×

22 பூத்கள் பதற்றம் நிறைந்தவை என அறிவிக்க வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வலியுறுத்தல்

சென்னை: திருவல்லிக்கேணி பகுதிகளில் 22 பூத்களை மீண்டும் பதற்றம் நிறைந்தவை என அறிவிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்பி இன்பதுரை வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிமுக எம்பி இன்பதுரை நேற்று சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த இன்பதுரை கூறியதாவது : சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள 116வது வார்டில் (மாட்டாங்குப்பம், அயோத்தியா குப்பம் பகுதிகள்) தேர்தல் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. ​

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்தப் பகுதியில் உள்ள 22 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அதிகாரிகளால் பட்டியலிடப்பட்டிருந்தன. ​ஆனால், தற்போது அந்தப் பட்டியலிலிருந்து இந்த வாக்குச்சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் ரவுடிசம் மற்றும் பூத் கேப்சரிங் நடக்க வாய்ப்புள்ளது. ​

எனவே, இந்த 22 பூத்களையும் மீண்டும் பதற்றம் நிறைந்தவை என அறிவித்து, அங்கு துணை ராணுவப் படை மூலம் பிளாக் மார்ச் நடத்தவும், கூடுதல் கண்காணிப்பு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் அதிரடியாக அதிகாரிகளை மாற்றுவது போல, தமிழகத்திலும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Chennai ,Inpathurai ,Thiruvallikeni ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Archana Patnaik ,Chennai Secretariat ,Inpathurai… ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...