×

போலி ஆவணம் மூலம் ரூ.122 கோடி சிமென்ட் நிறுவனம் அபகரிப்பு ஜேப்பியார் பேரன் ஜெயகுமார் கிறிஸ்துராஜன், மனைவி மீது வழக்கு: ஜேப்பியார் மனைவி ரெமிபாய் புகாரின் மீது நடவடிக்கை

சென்னை: திருச்சியை தலைமையிடமாக கொண்டு பிரபல தொழிலதிபர் ஜேப்பியார் பெயரில் ஜேப்பியார் சிமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் 1992ம் ஆண்டு ெதாடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் சிமெண்ட் ‘ஜெய்ஷக்தி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிமெண்ட் தொழிற்சாலை உயிரிழந்த தொழிலதிபர் ஜேப்பியார் மனைவி ரெமிபாய் ஜேப்பியார் உள்ளார்.

இந்நிலையில் தொழிலதிபர் ஜேப்பியார் மனைவி ரெமிபாய் ஜேப்பியார்(81) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், எனது கணவர் பெயரில் தொடங்கப்பட்ட ஜேப்பியார் சிமெண்ட் நிறுவனம் எனது பெயரில் உள்ளது. வயது மூப்பு காரணமாக எனது மகள் வழி மகன் ஜெயகுமார் கிறிஸ்துராஜன் நிறுவனத்தை கவனிக்க நியமிக்கப்பட்டார். சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினரான இருந்த அவர், போலி ஆவணங்கள் மூலம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றிக்கொண்டார்.

அதன்படி நிறுவனத்தின் 1.20 லட்சம் பங்குகளை அதாவது ரூ.122 கோடி மதிப்புள்ள சொத்தை ஜெயகுமார் கிறிஸ்துராஜன் தனது பெயரில் மாற்றி கொண்டு ஏமாற்றிவிட்டார். எனவே போலி ஆவணம் மூலம் ரூ.122 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த ஜெயகுமார் கிறிஸ்துராஜன், அவரது மனைவி சரண்யா தனபாலன், மோசடிக்கு உடந்தையாக இருந்த பழனிசாமி, சண்மூக சுந்தரம் உள்ளிட்ட 6 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, ரெமிபாய் ஜேப்பியாருக்கு சொந்தமான சிமெண்ட் நிறுவனத்தை அவரது மகள் வழி மகனான ஜெயகுமார் கிறிஸ்துராஜன் மற்றும் அவரது மனைவி சரண்யா தனபாலன் உள்ளிட்டோர் திட்டமிட்டு போலி ஆவணம் மூலம் அபகரித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து ஜேப்பியார் பேரன் ஜெயகுமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி உட்பட 6 பேர் மீது கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Jeppiar ,Jayakumar Christurajan ,Remibai ,Chennai ,Jeppiar Cements Private Limited ,Trichy ,Jayshakti'.… ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...