சென்னை: அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 2ம் தேதி (இன்று) முதல் 18ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 2ம் தேதி (இன்று) – தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதியில் மாலை 3 மணி முதல் பிரசாரம் செய்கிறார்.
3ம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆற்காடு தொகுதி, 4ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி, விழுப்புரம் தொகுதி, 5ம் தேதி – புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி, 6ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர், சேலம் மாவட்டம் வீரகனூர் (கங்கவல்லி தொகுதி), 7ம் தேதி – சேலம் மாவட்டம் வாழப்பாடி (ஏற்காடு தொகுதி), ஆத்தூர் தொகுதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி, 8ம் தேதி மற்றும் 9ம் தேதி – சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள்,
10ம் தேதி – காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் தொகுதி, 11ம் தேதி – தஞ்சாவூர், திருவாரூர் தொகுதி, 12ம் தேதி நாகப்பட்டினம் தொகுதி, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் (பூம்புகார் தொகுதி), 13ம் தேதி – திருச்சி, திண்டுக்கல் தொகுதி, 14ம் தேதி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி, மதுரை மாவட்டம், 16ம் தேதி – கோவை மாவட்டம் ரோட ஷோ, மேட்டுப்பாளையம் தொகுதி, திருப்பூர் தொகுதி, 17ம் தேதி – சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள், 18ம் தேதி – நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி, கரூர் தொகுதி, ஈரோடு தொகுதி உட்பட்ட தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த பிரசாரங்கள் அனைத்தும் மாலை 3 மணிக்கு மேல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
