- திமுக
- சண்முகம்
- சென்னை
- திராவிட முன்னேற்ற கழகம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மார்க்சிஸ்ட்
- மாநில செயலாளர்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- தியாகராய நகர்…
சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தியாகராய நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிமுகம் செய்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பழனி தொகுதியில் பாண்டி, கந்தர்வகோட்டை தொகுதியில் சின்னதுரை, பத்மநாபபுரத்தில் தொகுதியில் செல்லசுவாமி, திருவொற்றியூர் தொகுதியில் சுந்தரராஜன், கீழ்வேளூர் தொகுதியில் லதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது. 2017ம் ஆண்டில் இருந்து இந்த அணி தொடர்ந்தாலும் இப்போது அணியை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் புதிய கட்சிகள் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் திமுக தமிழ்நாட்டில் நிறைவேற்றியுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறிப்பாக மகளிர் நலத் திட்டங்கள் அனைத்து மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. இவர்கள் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களால் பயன் பெற்ற மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வரும் 4ம் தேதி கேட்பு மனு தாக்கல் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
