×

தேர்தல் பிரசாரத்திற்காக திருவாரூர் சென்ற முதல்வர் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை

தஞ்சாவூர்: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம்தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். திருவாரூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 9.40 மணி அளவில் தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வந்தடைந்தார்.

பின்னர், அங்கிருந்து கார் மூலமாக திருவாரூர் சென்றார். அம்மாபேட்டை அருகே சாலியமங்கலம் வழியாக 10.10 மணிக்கு முதல்வர் பிரசார வாகனம் வந்த போது தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புகுழு அலுவலர் அஜய்ராஜ் தலைமையிலான அலுவலர்கள் முதல்வரின் பிரசார வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சுமார் 10 நிமிடம் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனைக்கு பிறகு முதல்வர் வாகனம் அங்கிருந்து திருவாரூர் புறப்பட்டது. சோதனையின் போது வாகனத்திற்குள் அமைச்சர்கள் கே.என்.நேரு, டிஆர்பி ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Chief Minister ,Thiruvarur ,Thanjavur ,Tamil Nadu Assembly ,DMK ,president ,M.K. Stalin ,Tamil Nadu ,Secular Progressive Alliance ,
× RELATED பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்