×

செங்கோட்டையன் ஆதரவாளர் மகனுக்கு எப்படி சீட் தந்தீங்க?

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தவெக சார்பில் செங்கோட்டையன் ஆதரவாளரான மகுடீஸ்வரனின் மகன் டாக்டர் பிரவீன்குமாருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால், கட்சி துவங்கிய காலம் முதல் செலவுகள் செய்து வந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலனுக்கு சீட் வழங்க வலியுறுத்தி பழநியை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணிப்போமென தலைமைக்கு எச்சரிக்கை விடுத்து போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இதுகுறித்து தவெக நகர செயலாளர் மிதுன் மனோகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பழநி தொகுதியை பொறுத்தவரையில் உழைச்சவங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கல. யாருனே தெரியாத ஒரு நபரை வந்து வேட்பாளரா அறிவிச்சுருங்காங்க. எங்க கட்சி சார்பா, எங்க சைடு சார்பா நாங்க யாருமே அவருக்கு வேலை செய்ய மாட்டோம். அவருக்கு சீட் கொடுத்ததற்கு ஒரே காரணம் செங்கோட்டையனின் ஆதரவாளரான மகுடீஸ்வரனின் மகன் என்பது மட்டும்தான்.

அவர் கட்சியில உறுப்பினர் கூட கிடையாது. நாங்க பழகுனதோ, பார்த்ததோ கிடையாது. நேத்து தான் பார்த்தோம் அவரை. அதனால் இதை மறுபரிசீலனை செய்ய தலைமை என்ன நடவடிக்கை எடுக்கனுமோ அதை எடுக்கனும். கட்சியிலே சொல்லியிருக்காங்க. உழைச்சவனுக்கு தான் எல்லாமே சொல்லியிருக்காங்க. போஸ்டர் ஒட்டியவன், ஆரம்பத்துலே இருந்து இருந்தவனுக்கு தான் கொடுப்போம்னு சொன்னாங்க. ஆனால் இப்ப அறிவிக்கப்பட்டவர் ஒரு வார்டுக்கு கூட வந்தது கிடையாது’’ என்றனர்.

Tags : Sengottaiyan ,Palani, Dindigul district ,Dr. ,Praveen Kumar ,Mahudeeswaran ,Thaveka ,Palani ,Balan ,
× RELATED பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்