வருவாய்த் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் பட்டுக்கோட்டை வட்டார கிராமங்களில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கள ஆய்வு

பணிகள் முடங்கியது

பட்டுக்கோட்டை, பிப்.18: பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்துடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ரவிவர்மா, மூவேந்தன், அபிஷேக், பிரசாந்த், பிரதுல், தமிழ்மணி, ராகுல், கலையரசன் ஆகியோர் கிராம வேளாண்மைப்பணி அனுபவத்திட்டத்தின்கீழ் பட்டுக்கோட்டை வட்டார கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளிடம், தென்னை, நெல், உளுந்து, எள் போன்ற பயிரிடும் பயிர்கள் பற்றியும், பயிர் செய்யும் முறைகள் பற்றியும் கேட்டறிந்தனர். மேலும் சொட்டுநீர் பாசனப் பயன்கள் பற்றியும், முக்கிய பயிரான தென்னை பராமரிப்பு பற்றியும் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

Related Stories: