×

5 தொகுதிகளுக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு: பெ.சண்முகம் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ச்சுணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களையும் கட்சியின் மாநிலக்குழு தேர்வு செய்துள்ளது. அதன்படி பழனி தொகுதியில், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, கந்தவர்கோட்டை தொகுதியில் மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, பத்மநாபபுரம் தொகுதியில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர் செல்லசுவாமி, திருவொற்றியூர் தொகுதியில், மாநிலக்குழு உறுப்பினர் சுந்தரராஜன், கீழ்வேளூர் தொகுதியில் நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : CPM ,P. Shanmugam ,Chennai ,State Secretary ,Marxist ,DMK ,Secular Progressive Alliance ,Tamil Nadu ,Communist Party of India ,
× RELATED 234 தொகுதியிலும் வேட்புமனு தாக்கல்...