×

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக மாஜி எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்: அமமுகவினரும் ஐக்கியம்

 

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் நேற்று திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் அதிமுகவின் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கா.தமிழரசன் தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த மேலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கா.பொன்னுச்சாமி, மாவட்ட எம்ஜிஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் யூ.மீராஉசேன்,

மேலூர் நகர்மன்ற உறுப்பினர் டி.திவாகர்-மேலூர் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அம்மாபேரவை செயலாளர் ஆர்.உதயகுமார், இணைச்செயலாளர் கே.பி.உதயசங்கர், மாணவர் அணிச் செயலாளர் ஏ.கரும்புசெல்வம், இலக்கிய அணிச் செயலாளர் வி.ஆர்.குணாநிதி, இலக்கிய அணி பொருளாளர் பி.பாலாஜி, கிளைச் செயலாளர்கள் பதினெட்டாங்குடி ஆர்.செல்வகுமார், அரசப்பன்பட்டி வி.செல்வம்(எ) வீரணன், மேலமைப்பு பிரதிநிதி கொட்டகுடி வி.பால்ச்சாமி- இளைஞர் பாசறை செயலாளர் ஆ.இளவரசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதுரை வடக்கு மாவட்டம் அமமுக செய்தி தொடர்பாளர் வீர. வெற்றிப்பாண்டியன் தலைமையில் அமமுகவைச் சேர்ந்த மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் எம்.சுரேஷ்குமார், மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் பி.குருமூர்த்தி ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

Tags : AIADMK MLA ,DMK ,Chief Minister ,MK Stalin ,AMMK ,Chennai ,Former ,Tamilarasan ,AIADMK ,Madurai Suburban East District ,Amma Peravai… ,
× RELATED குறுகிய சாலையில் அனுமதி கேட்கும் தவெக;...