×

வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி: பழநி அருகே பரபரப்பு

பழநி, மார்ச் 28: பழநி அருகே வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலியாயின. பழநி அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் புகழேந்தி (26). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகில் பட்டி அமைத்து வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை இவரது பட்டிக்குள் வெறிநாய்கள் புகுந்து வெள்ளாடுகளை கடித்துள்ளன.

நாய்கள் கடித்ததில் 4 வெள்ளாடுகள் படுகாயமடைந்து உயிரிழந்தன. தகவலறிந்ததும் கால்நடைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கடந்த செப்டம்பர் மாதமும் இவரது பட்டிக்குள் வெறிநாய்கள் புகுந்து கடித்ததில் 1 வெள்ளாடு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென புகழேந்தி தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Palani ,Pugazhendi ,Kanchanayakkanpatti ,
× RELATED ரூ.11.35 லட்சம் அபேஸ் 3 பேர் மீது வழக்கு