- திண்டுக்கல்
- திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம்
- அரவிந்த்
- சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் தெரு
- மயிலாதுதுரை மாவட்டம்
திண்டுக்கல், மார்ச் 28: சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (29). இவர் கடந்த 2024ம் ஆண்டு திண்டுக்கல் பகுதிக்கு வந்து கூலி வேலை செய்து வந்தார். அப்போது அவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் புகாரின் பேரில் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அரவிந்த்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்தியத்தாரா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் அரவிந்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
