- பங்குனி உத்திர திருவிழா
- ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயில்
- திருக்காட்டுப்பள்ளி
- காவேரி நதி
- பிரம்மோற்சவம் பங்குனி உத்திர திருவிழா
- சௌந்தர்யநாயகி உடனமர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில்
- தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி...
திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 28: திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவிற்காக காவிரி ஆற்றில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சௌந்தர்யநாயகி உடனமர் ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயிலில், பிரம்மோற்சவமான பங்குனி உத்திர பெருவிழா வரும் 31ம் தேதி நடக்கிறது. ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆகும்.
இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும். அதற்காக காவிரி ஆற்றில் விழா நடக்க உள்ள பகுதியில் பங்குனி உத்திர மஹோற்சவ கமிட்டி மூலம் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பிரகதீஸ்வரன், ஜனனி, பங்குனி உத்திர மஹோற்சவ கமிட்டி ஜெயக்குமார், ஜெயராமன், விஜி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
