×

நாகை புத்தூர் புறவழிசாலையில் டூவீலரில் வந்தவரிடம் ரூ.74,900 பறிமுதல்

நாகப்பட்டினம், மார்ச் 28: நாகை புத்தூர் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் ரூ.74,900ம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் புறவழிச்சாலையில் பறக்கும் படை அலுவலர் கலைமாறன் தலைமையில் அந்த வழியாக வந்த கீழ்வேளூர் அருகே ஆவாரணிபுதுச்சேரியை சேர்ந்த ஆனந்தன் வந்த இரண்டு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 74 ஆயிரத்து 900 இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : Nagaiputhur Bypass ,Nagapattinam ,Election Flying Squad ,Flying Squad ,Kalaimaran ,Puthur Bypass ,Nagapattinam Assembly ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்