×

டீக்கடையில் குட்கா, ஹான்ஸ் விற்றவர் கைது

வேலூர், மார்ச் 28: வேலூர் பள்ளிக்குப்பம் நடுமோட்டூர் பகுதியில் டீக்கடையில் குட்கா, ஹான்ஸ் மற்றும் கூல் லிப் பாக்கெட்டுகள் விற்கப்படுவாக கிடைத்த தகவலையடுத்து காட்பாடி போலீசார் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று டீக்கடையில் சோதனையிட்டனர். அப்போது அங்கு 2 கிலோவுக்கு மேற்பட்ட குட்கா, ஹான்ஸ் மற்றும் கூல் லிப் பாக்கெட்டுகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து குட்கா, ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார், டீக்கடை உரிமையாளர் ராஜா(எ) ராஜேந்திரன்(55) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vellore ,Nadumotoor ,Pallikuppam, Vellore ,Katpadi ,
× RELATED கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த...