சீர்காழி, மார்ச் 27: சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து மாதிரி படம் மூலம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் சார்பில் நகராட்சி ஆணையர் சசிகுமார் தலைமையில் ஊழியர்கள் நூறுசதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் வாக்களிப்பது குறித்து செயல்விளக்கம் பொது மக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேலாளர் தினகர், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
