×

எடப்பாடி கொடுத்தது குளிர்ச்சிதேர்தல் அறிக்கை நாங்க கொடுக்க போறது வளர்ச்சி தேர்தல் அறிக்கை: சொல்கிறார் தமிழிசை

சென்னை: பழனிசாமி குளிர்ச்சியான தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார். நாங்கள் வளர்ச்சியான தேர்தல் அறிக்கையை கொடுப்போம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: சென்னை மயிலாப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கிறது. தாமரை நிச்சயம் மயிலாப்பூரில் வெற்றி பெறும். வாரிசு அரசியலை எந்த விதத்திலும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நான் பாஜவில் இணைந்து 27 ஆண்டுகள் ஆகிறது. அடிப்படை உறுப்பினர் பதவியில் ஆரம்பித்து, மண்டல், மாவட்டம், மாநிலம், தேசியம் என்கிற அளவில் நான் வளர்ந்திருக்கிறேன். தேர்தல் அறிக்கையை தயாரித்து விட்டோம். அதை மாநில தலைவரின் ஒப்புதலுக்கு வழங்கியிருக்கிறோம். அவர் ஒப்புதல் வழங்கியதும் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். பழனிசாமி குளிர்ச்சியான தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார். நாங்கள் வளர்ச்சியான தேர்தல் அறிக்கையை கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Edappadi ,Tamilisai ,Chennai ,Palaniswami ,Tamilisai Soundararajan ,Former ,president ,BJP ,Kamalalayam ,T. Nagar ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...