- அஇஅதிமுக
- தளவாய்சுந்தரம்
- நாடார்
- குமாரி மாவட்டம்
- கன்னியாகுமாரி
- டாக்கா
- கில்லியூர்
- பாஜக
- நாகர்கோவில்
- Kulachal
- விளவங்கோடு
- பத்மநாபபுரம்
குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதி மட்டும் அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 5 தொகுதிகளில் கிள்ளியூரில் தாமரை சின்னத்தில் தமாகாவும், நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதிகளில் பாஜவும் போட்டியிடுகிறது. 6 தொகுதிகள் உள்ள ஒரு மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் அதிமுக பெற்றுள்ள நிலையில், அந்த கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்துக்கு எதிரான அலை வீசுகிறது.
இதுதொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கன்னியாகுமரியில் தளவாய்சுந்தரம் போட்டியிட்டால், அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவேன். அவரை விட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என ஆவேசமடைந்து பேட்டி அளித்தார். மேலும் கன்னியாகுமரி தொகுதியில் 72 சதவீதம் நாடார் சமூக வாக்குகள் உள்ளதால், தளவாய்சுந்தரத்தை தவிர வேறு ஒருவரை போட்டியிட வைத்தால், அவருக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதி மட்டும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அதிமுகவில் உள்ள நாடார்கள் மற்றும் நாடார் சமுகத்தை சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சன் பகுதியில் உள்ள காமராஜர் சிலையின் மேல் பகுதியில் சுற்றியுள்ள கம்பிவேலியில் தளவாய்சுந்தரத்திற்கு எதிராக போஸ்டர்கள் தொங்க விடப்பட்டுள்ளது. இதில் தளவாய்சுந்தரத்தை வன்மையாக கண்டிக்கிறோம் இவன் நாடார்கள் என இருமுறை எழுதப்பட்டு இருந்தது.
காமராஜர் சிலையில் தளவாய்சுந்தரத்தை கண்டித்து தொங்கவிட்ட போஸ்டரால் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த போஸ்டரை அப்புறப்படுத்தினர். தளவாய்சுந்தரத்திற்கு எதிராக அலைவீசி வருவதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உளளனர். இந்தநிலையில் நேற்று முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் ஆதரவாளர்கள் வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு குவிந்தனர்.
பின்னர் தளவாய்சுந்தரத்தின் படத்தை எந்தி செருப்பால் அடித்து, அவரது படத்தை கிழித்து எறிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். அதிமுகவிற்கு விசுவாசமாக பணியாற்றி வருபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைக்காமல் செய்த தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடக்கூடாது என கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் வடசேரியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
