×

பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் எஸ்பி சுதாகர் அதிரடி உத்தரவு தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

தண்டராம்பட்டு, மார்ச் 27: தேர்தல் நேரம் என்பதால் காவல்துறையினர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்று தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்பி சுதாகர் உத்தரவிட்டுள்ளார். தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் நேற்று திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தண்டராம்பட்டு, வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர், தானிப்பாடி ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காவல்துறையினர் தேர்தல் நேரம் என்பதனால் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும். விதிமுறை மீறி செயல்படுபவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அனைத்து காவலரும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். தேர்தல் புறக்கணிப்பு என்று உங்கள் கிராமத்தில் எந்தப் பகுதியில் சொல்கிறார்களோ உடனே அந்த கிராமத்திற்கு சென்று எந்தத் துறை சார்பில் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்று கேட்டு உடனே அதனை அந்தத் துறையை அழைத்து சரி செய்ய வேண்டும். தேர்தல் முடியும் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என கூறினார். அப்போது டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், ஜெய தேவி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags : SP ,Sudhakar ,Thandarambattu police ,Thandarambattu ,police station ,Thandarambattu police station ,Tiruvannamalai ,Sudhakar… ,
× RELATED பறக்கும் படை நடத்திய சோதனையில் இதுவரை...