தண்டராம்பட்டு, மார்ச் 24: தண்டராம்பட்டு அருகே மர்ம நபர்கள் விவசாயியின் வீட்டை உடைத்து 5 சவரன் திருடிச்சென்றது குறித்து மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டராம்பட்டு அடுத்த காட்டாம்பூண்டி புது தெருவை சேர்ந்த விவசாயி சின்னதுரை(63). இவரது மனைவி மணிமொழி(55). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் கலைச்செல்வன் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகனை பார்ப்பதற்காக சின்னதுரை மணிமொழி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுள்ளனர். இவரது மேல் வீட்டில் வாடகை விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் பூட்டை உடைத்து காணப்படுவதாக மேல் வீட்டில் வசிக்கும் நபர் தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வீட்டின் உரிமையாளர் சின்னதுரை மணிமொழிக்குபோன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
