குடியிருப்பு வாசிகள் கோரிக்கை மருதன்கோன் விடுதியில் பேருந்து இயக்க கோரி அரசு கல்லூரி மாணவர்கள் மறியல் முயற்சி

கறம்பக்குடி, பிப்.17: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன் கோன் விடுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் காலை குறிப்பிட்ட நேரத்திற்கு கல்லூரிக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர் . இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகள் ஒரு மாத காலமாக வராமல் நிறுத்தியதை கண்டித்து நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அரசையும் போக்குவரத்து நிர்வாகத்தையும் கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு மருதன்கோன்விடுதி 4 ரோடு பிரிவு சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது அந்த வழியாக பொதுமக்களை சந்தித்து நன்றி சொல்வதற்காக வருகை தந்த திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் காரை விட்டு இறங்கி கல்லூரி மாணவர்களிடம் பேசினார் அப்போது மாணவர்கள் எங்களுக்கு கல்லூரிக்கு வருகை தருவதற்கு சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்று கூறி நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எம்பியிடம் கூறினர். உடனே எம்பி திருநாவுக்கரசர் மாணவர்களின் நலன் கருதி புதுக்கோட்டை, தஞ்சாவூர் கலெக்டர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க படும் என்றார். இதையடுத்து மாணவ, மாணவிகள் தங்கள் மறியல் போராட்ட முயற்சியை கைவிட்டு விட்டு சென்றனர்.

Related Stories: