×

உக்ரைனின் 400 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: ரஷ்யா தகவல்

மாஸ்கோ: ரஷ்யாவின் பல்வேறு இடங்களை குறி வைத்து உக்ரைன் ஏவிய 400 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இருநாட்டு படைகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்ய ராணுவம் நேற்று முன்தினத்தில் உக்ரைன் மீது தொடர்ச்சியாக 1000 டிரோன்கள் மற்றும் 34 ஏவுகணைகளை வீசியது. வழக்கமாக இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தும் ரஷ்யா பட்ட பகலில் டிரோன், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில், 6 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர் என்ற உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று ரஷ்யாவின் 13 இடங்களை குறி வைத்து உக்ரைன் 400 டிரோன்களை வீசி தாக்கியது. 4 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய படைகள் உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து, ரஷ்யப் பகுதிகள் மற்றும் கிரிமியா மீது ஒரே இரவில் நடத்தப்பட்டதாகப் பதிவான மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். உக்ரைன் ஏவிய 389 டிரோன்களை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : Russia ,Moscow ,Ukraine ,
× RELATED மேற்கு ஆசியா போர் நிறுத்தத்திற்கான 15...