விழுப்புரம்: தேர்தலில் சீட்டு விவகாரத்தில் சி.வி.சண்முகம் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் அதிமுக நகர செயலாளர் பசுபதி, தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். கட்சி பொறுப்பையும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். என்னை தொடர்ந்து அவமானப்படுத்துவதால் மன உளைச்சலில் இருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
