×

ஐ.ஆர்.இ.எல் ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க கூட்டம்

 

குளச்சல்,மார்ச் 24 : மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல்.ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி ஆலை அருகில் வாயிற்கூட்டம் நடந்தது.சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார். செயலாளர் துரைபாண்டி, பொருளாளர் ஜாண்சன், துணைத்தலைவர் சுரேந்திரகுமார், இணை செயலாளர் முகம்மது ராபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவைகள் பணியில் இருக்கும்போது கிடைத்தது போல் வழங்க கேட்பது எனவும், நிறுவனம் நேரடியாக மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் எனவும், இ.பி.எப்.தொடர்பான உயர் ஓய்வூதியம் வழங்க கேட்டும், ஈமச்சடங்கு செலவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Tags : IREL Retired Workers' Union ,Kulachal ,Manavalakurichi ,Union ,President ,Shekar ,Duraipandi ,Treasurer ,Johnson ,Vice President ,Surendrakumar ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது