- கூடலூர்
- தேர்தல் நிலைக்குழு
- பறக்கும் படைகள்
- ஆண்டிப்பட்டி
- தேனி மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- பிறகு நான்
கூடலூர், மார்ச் 24: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் பகுதிகளில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தமிழக மற்றும் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள கூடலூர் நகராட்சி பகுதி குமுளி வரை உள்ளது. கேரளாவில் வருகின்ற ஏப்.9ம் தேதியும், ஏப்.23-ம் தேதியும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே அந்தந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு மாநில போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இரு மாநில போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக கூடலூர் குமுளி வழித்தடம் உள்ளதால் எல்லைப் பகுதிகளிலும் எல்லையை ஒட்டி உள்ள மாநில பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு, வாகனங்களை நிறுத்தி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
