- அலக்கரை
- அல்லாக்கர் நகராட்சி பேருந்து நிலையம்
- சட்டமன்ற பொதுத் தேர்தல்
- நகர வாழ்வாதார இயக்கம்
- வருவாய் திணைக்களம்
- மாநகர
கீழக்கரை, மார்ச் 24: கீழக்கரை நகராட்சி பேருந்துநிலையத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், பொதுமக்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கீழக்கரை நகராட்சி பேருந்துநிலையத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பாதகைகளுடன், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர் ராமசுப்ரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் கோகிலா, ஆணையர் கிருஷ்ணவேணி, சுகாதார ஆய்வாளர் பரகக்த்துல்லா, நகர்ப்
புற வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் சத்ய சொரூபன், ஜெகன் விஜய், சமுதாய அமைப்பாளர் சரளாதேவி, வருவாய்த்துறையினர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
