- ராமநாதபுரம்
- சக்கரக்கோட்டை
- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத் துறை
- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026
- ராமநாதபுரம் பஞ்சாயத்து யூனியன்
- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத் துறை…
ராமநாதபுரம், மார்ச் 24: சக்கரக்கோட்டையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்துறையின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026யை, முன்னிட்டு, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டையில் நேற்றுதமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்துறையின் மூலம் வாக்காளர் விழிப்பு
ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் சக்கரக்கோட்டை ஊராட்சியில் பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு தொடர்பான அழைப்பிதழ்களை வீடுகள்தோறும் வழங்கி, அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில், மகளிர் குழு உறுப்பினர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்ருக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட அலுவலர் பாபு, உதவி திட்ட அலுவலர்கள் சித்ராதேவி, ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
