- வலார்பிரை பஞ்சமி
- வராஹி
- அம்மன்
- மதுரை
- சர்வயோக மகா மங்கள வராகி
- கோவில்
- கல்லம்பட்டி
- அழகர் கோவில்
- வலார்பிரை
- தெய்பிராய்
- பஞ்சமி
மதுரை, மார்ச் 24: அழகர்கோவில் அருகே கல்லம்பட்டியில் சர்வயோக மகா மங்கள வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று வளர்பிறை பஞ்சமியையொட்டி வராஹி அம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சுற்றி உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
