- அஇஅதிமுக
- செங்கோட்டை
- தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர்கள் குழு
- மாவட்ட செயலாளர்
- கிருஷ்ணமுரளி
- சட்டமன்ற உறுப்பினர்
- அண்ணா தொழிற்சங்க காங்கிரஸ்
- துணை செயலாளர்
- கந்தசாமி பாண்டியன்
- மாவட்ட கவுன்சில்
- ஜனாதிபதி...
செங்கோட்டை, மார்ச் 24: தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் வைத்து நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பேசுகையில், தேர்தலை பொறுத்தமட்டில் வேட்பாளர்களை விட வழக்கறிஞர்களுக்கு வேலை பளு அதிகம் தான். பிரசார வாகன அனுமதி, பேச்சாளர்கள் அனுமதி, பிரசாரம் நடைபெறும் இட அனுமதி என ஒவ்வொன்றிற்கும் அனுமதியினை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு நாம் பெற வேண்டும். தென்காசி வடக்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் வழக்கறிஞர்கள் குழுவாக பிரிந்து பணியாற்ற வேண்டும். இந்த தேர்தலில் நம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் அமோக வெற்றி பெற வேண்டும். அதற்கு வழக்கறிஞர் அணி செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில் வழக்கறிஞர்கள் ஆதிபாலசுப்பிரமணியன், கணேசன், சிவராம கிருஷ்ணன், வெங்கடேஷ், ராஜேந்திரபூபதி, கார்த்திகை ராஜன், பாபு, ராம்குமார் பூசைதுரைச்சி, சுப்பிரமணியன், ராஜேஷ், செல்வகுமார், நாகராஜன், வைரமுத்து, பரமசிவன், சுப்பிரமணியன், தெய்வகுமார், குலசேகரன், சுப்பிரமணியன், செல்வகுமார், வெங்கடேஷ், ராஜ்குமார், ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
