×

மணிமுத்தாறு வனப்பகுதியில் 800 கிலோ பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் அகற்றம் சிவில் சர்வீஸ் தேர்வில் 7வது இடம் பிடித்த செங்கோட்டை டாக்டர் கலெக்டருடன் சந்திப்பு

கடையம், மார்ச் 24: இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வில் 7வது இடம் பிடித்த செங்கோட்டை டாக்டர் ராஜா முகைதீன் தென்காசி கலெக்டர் கமல்கிஷோரை சந்தித்து பேசினார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வடகரையை சொந்த ஊராகக் கொண்ட ராஜா முகைதீன் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியாவில் 7வது இடத்தை பிடித்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வருகை தந்த அவர், தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோரை தனது பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்வில் தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் கலெக்டர், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் கவுரவச் செயலாளர் முகம்மது ஸலீம், உறுப்பினர் புகாரி மீரா சாகிப் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Manimutharu forest ,Kadayam ,Raja Mukaidin ,India ,Tenkasi ,Kamal Kishore ,Vadakarai ,Sengottai ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது