கருங்கல், மார்ச் 24: கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த பைக்கில் வந்த நபரிடம் 51, 200 ரூபாய் இருந்தது. அதை அவர் நகை வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் பணத்திற்கு ஆவணம் கேட்ட போது ஆவணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மீன்வளத் துறையில் பணியாற்றும் அலுவலர் வெர்ஜின்கிராஸ் அந்த நபரிடமிருந்த 51 ,200 ரூபாயை பறிமுதல் செய்தார். மேலும் அந்த நபர் மிடாலம் பகுதியை சேர்ந்த ஜீன் ஜிப்சன் (34) என்பதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
