- மார்த்தாண்டம்
- பாஸ்கரன்
- முகிலன்விலாய்
- மணிகட்டிபொட்டல்
- Agastheeswaram
- அண்ணாமலை பல்கலைக்கழகம்
- ஜெயசேகர்
- இஞ்சிவிளை
- கலியகவிலை.…
மார்த்தாண்டம், மார்ச் 24: அகஸ்தீஸ்வரம் அருகே மணிக்கட்டிபொட்டல் முகிலன்விளையை சேர்ந்தவர் பாஸ்கரன் (69). அண்ணாமலை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கும், களியக்காவிளை அருகே பாறசாலை அடுத்த இஞ்சிவிளையை சேர்ந்த ஜெயசேகர் (61) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயசேகர் தனது பைனான்சில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பாஸ்கரன் கடந்த 2023ம் ஆண்டு ரூ.25 லட்சத்து 9 ஆயிரத்து 963-ஐ முதலீடு செய்தார். இதையடுத்து பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உள்ள பாஸ்கரன் கணக்கில் முதலீட்டுக்கான வட்டி செலுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.பின்னர் வட்டி பாஸ்கரன் கணக்கில் செலுத்தப்படவில்லை. கடந்தாண்டு பாஸ்கரன் முதலீட்டுக்கான வட்டியுடன் கூடிய பணத்தை கேட்டபோது ஜெயசேகர் பணத்ைத கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாஸ்கரன் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் பணம் மோசடி செய்ததாக ஜெயசேகர், அவரது மனைவி கலா (55) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
