×

போலீசாருடன் நாதகவினர் வாக்குவாதம்

புதுச்சேரி, மார்ச் 24: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பு மனுதாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் அனைத்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களிலும் போலீசார், துணை ராணுவ படையினருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் ராஜ்பவன் மற்றும் முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனிடையே, ராஜ்பவன் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கட்சி நிர்வாகிகளுடன் புதுச்சேரி நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலகத்தை சுற்றி கூட்டமாக நின்றிருந்தனர். இதைக்கண்ட போலீசார் கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தை சுற்றி நிற்கக்கூடாது, தள்ளி நிற்குமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த நாதக நிர்வாகிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Puducherry ,Puducherry Assembly ,Puducherry Beach Road… ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது