தஞ்சாவூர், மார்ச் 23: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் செய்து அமைதி நிலவ வலியுறுத்தி தஞ்சாவூரில் வள்ளலார் அறக்கட்டளை சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. ரஷ்யா – உக்ரைன் இடையே ஓராண்டாக போர் நிலவி வரும் சூழ்நிலையில் தற்சமயம் அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் நடைபெற்று எண்ணற்ற உயிர்கள் மடிந்துள்ளன.
இதையடுத்து தஞ்சாவூரில் அருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை சார்பில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவ வலியுறுத்தி அமைதிப் பேரணி நடைபெற்றது, இதில் அருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தஞ்சையின் முக்கிய வீதிகளில் விளக்குகள் ஏந்தி அமைதிப் பேரணியாக சென்றனர்.
